ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் பேராயர் காலமானார்

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருச்சி - தஞ்சை மண்டல முன்னாள் பேராயர் அந்தோணி டிவோட்டா இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். அவரது பூத உடல் மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 | 

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருச்சி - தஞ்சை மண்டலத்தின் பேராயராக இருந்தவர் அந்தோணி டிவோட்டா (76). 2001 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பேராயராக பணியாற்றிய அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

அவரது பூத உடல் திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு கிறிஸ்தவ மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவர் பல்வேறு கிறிஸ்தவ கல்லூரிகளில் பேராசிரியராகவும், ரோமன் கத்தோலிக்க சென்னை மறை மாவட்ட முதன்மை குருவாகவும், சென்னை சாந்தோம் தேவாலயத்தின் பங்கு தந்தையாகவும் பணியாற்றியவர். அவர் தனது உடலை,  உடல் தானம் செய்துள்ளார்.

அவர் கண்கள் இன்று திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் நாளை திருப்பலிகள் முடிந்தபின்பு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்படும் அங்கு புனித ஜான் மருத்துவ கல்லூரிக்கு அவர் உடல் தானம் செய்யப்பட உள்ளது.

இவருடைய மறைவையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது என செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாவட்ட பொறுப்பு ஆயர் தேவதாஸ் ஆம்ப்ரூஸ் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP