சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினர் முயற்சி!

சின்னதம்பியை பிடிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி யானையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினர் முயற்சி!

சின்னதம்பியை பிடிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி யானையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

உடுமலையில் சுற்றித்திரியும் சின்ன தம்பி யானையை முகாமுக்கு அழைத்தும் செல்லும்படி  சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, உடுமலைப்பேட்டை கண்ணாடி புதூரில் இன்று காலை சின்னத்தம்பியை வனத்துறையினுடைய கால்நடை மருத்துவக்குழு மேற்பார்வையிட்டனர். 

கரும்பு காட்டில் சுற்றி திரியும் சின்னதம்பி யானையை பரிசோதிக்க, டாக்டர் சி.அசோகன் தலைமையிலான குழுவும், வனத்துறையினரும் முகாமிட்டுள்ளனர். மேலும், சின்னத்தம்பியை இடமாற்றுவதற்காக கலீம் மற்றும் சுயம்பு ஆகிய கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP