வெளிநாடு செல்லாத அமைச்சர்களுக்கு அதிருப்தி இல்லை: செல்லூர் ராஜூ

வெளிநாடு அழைத்து செல்லாத வருத்தம் அமைச்சர்களுக்கு இல்லை என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 | 

வெளிநாடு செல்லாத அமைச்சர்களுக்கு அதிருப்தி இல்லை: செல்லூர் ராஜூ

வெளிநாடு அழைத்து செல்லாத வருத்தம் அமைச்சர்களுக்கு இல்லை என மதுரையில் அமைச்சர் செல்லூர்  ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சாலை பணியினை கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டுகளில் பணிகள் மேற்கொள்ளவில்லை என்றும் எதற்காக  பணி நடைபெறுகிறது என்பதை மக்கள் அறிவார்கள் எனவும் கூறினார். 

திமுக கூட்டணியில் இருக்கும் பிரச்னையால் அதிமுகவிற்கு பிரச்னை இல்லை என்றும் எங்கு தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். ஒரு நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் அருமையான திட்டம் என்றும் அதை விமர்சிக்க கூடாது எனவும் தெரிவித்த அமைச்சர், கோப்பு கையெழுத்தாகும் முன் எதிர்கட்சிகள் குதிப்பதாக விமர்சித்தார். 

ஒரே ரேசன் அட்டை திட்டம் மூலம் மற்ற மாநிலத்திலிருந்து வருவோருக்கு அரிசி அல்லது கோதுமை மட்டுமே வழங்குவோம். மற்ற மாநிலத்தவருக்கு பிற பொருட்கள் கிடையாது. மத்திய தொகுப்பிலிருந்து அவர்கள் அரிசி வழங்குகிறார்கள் அதை அவர்களுக்கு வழங்க போகிறோம், அந்தந்த மாநிலத்தில் என்ன விலையோ அந்த விலைக்கு தான் அரிசி, கோதுமை வழங்கப்படும்.

வெளிநாடு அழைத்து செல்லாததால் அமைச்சர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை, ஜெயலலிதா இருக்கும் போது 2015ல் என்னை வெளிநாடு செல்ல அனுமதித்தார், அப்போது வெள்ளத்தால் விமான நிலையம் மூடப்பட்டு என் பயணம் தடையானது என குறிப்பிட்டார். ராதாரவி அதிமுகவில் இணைந்தவர் என்றாலும் ரஜினி குறித்த அவரது கருத்து பற்றி எதுவும் கூற முடியாது என்றும் ராதாரவி இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP