மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!

மதுரை விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பார்வதி நாதனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!

மதுரை விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மதுரை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகரிகள் சோதனையிட்டனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டம் நாராயணன் தெருவை சேர்ந்த பார்வதிநாதன் என்பவர் கொண்டு வந்த பைகளை சோதனையிட்டபோது, பையின் உள்புறம் மற்றும் அடிப்புறப்பகுதியில் யூரோ, சிங்கப்பூர், புருனே, மலேசியா என பல நாடுகளின் வெளிநாட்டு பணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரூ. 44 லட்சம் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து  பார்வதி நாதனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மதுரை பெருங்குடி காவல்நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP