கோவை: கஞ்சா விற்பனை செய்த 5 இளைஞர்கள் கைது!

கோவையில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒரே பகுதியைச் ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
 | 

கோவை: கஞ்சா விற்பனை செய்த 5 இளைஞர்கள் கைது!

கோவையில் இரு வேறு  இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒரே பகுதியைச் ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை சுங்கம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ராமநாதபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதனடிப்படையில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க போலீசார் சுங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் சுங்கம் தனியார் கல்லூரி அருகில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும் நிலையில் இருவர் நின்று கொண்டிருந்தனர்.

கோவை: கஞ்சா விற்பனை செய்த 5 இளைஞர்கள் கைது!

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கஞ்சா விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்படத்தை  தொடர்ந்து புலியகுளம் பகுதியைச் சேரந்த உதய்விக்ரம், மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று சுங்கம் புறவழிச்சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த புலியகுளம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், நவீன்குமார்,கௌசிக் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐவரிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா மற்றும் 2250 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP