மீன் சந்தையால் சென்னை  போரூரில்  கோர விபத்து : ஒருவர் படுகாயம் 

விபத்து ஏற்பட, சாலையில் போடப்பட்டுள்ள மீன் சந்தைதான் காரணம் என சொல்லப்படுகிறது. மேலும், இது போன்ற விபத்துகள் அடிக்கடி இப்பகுதியில் நிகழ்வதால், மீன் சந்தைக்கான விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் முன் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 | 

மீன் சந்தையால் சென்னை  போரூரில்  கோர விபத்து : ஒருவர் படுகாயம் 

சென்னை போரூர் ஏரி அருகே ஒவ்வொரு வாரமும் மீன் சந்தை போடப்படுவது வழக்கம். முக்கிய சாலை சந்திப்பான இப்பகுதியை ஆக்கிரமித்தபடி போடப்பட்டுள்ள மீன்  சந்தையால்  வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வழக்கம் போல இன்றும் சாலையை அக்கிரமித்தபடி போடப்படட சந்தையால்  அப்பகுதியில் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது. 

போரூரை நோக்கி வந்த இரு சக்கர வாகனம் மீது, பின்னால் வந்த தண்ணீர்  லாரி பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த 40 வயது மதிக்க தக்க நபரின்  இரண்டு கால்களும் நசுங்கி படுகாயம் அடைந்துள்ளார்.  பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மீன் சந்தையால் சென்னை  போரூரில்  கோர விபத்து : ஒருவர் படுகாயம் 

இந்த விபத்து ஏற்பட, சாலையில் போடப்பட்டுள்ள மீன் சந்தைதான் காரணம் என சொல்லப்படுகிறது. மேலும், இது போன்ற விபத்துகள் அடிக்கடி இப்பகுதியில் நிகழ்வதால், மீன் சந்தைக்கான விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் முன் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு இந்த பிரச்னை குறித்து காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP