அதிமுக பிரமுகரின் பழ குடோனுக்கு தீ வைப்பு: போலீசார் விசாரணை

திருச்சியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பழ குடோனுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 | 

அதிமுக பிரமுகரின் பழ குடோனுக்கு தீ வைப்பு: போலீசார் விசாரணை

திருச்சியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பழ குடோனுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர். அதிமுக பிரமுகரான இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு புதுக்கோட்டை நகர தெற்கு 4ஆம் வீதி, மற்றும் 3ஆம் வீதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள பழ குடோனுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துள்ளனர். 

அதிமுக பிரமுகரின் பழ குடோனுக்கு தீ வைப்பு: போலீசார் விசாரணை

இந்த தீ விபத்தில் குளிர் சாதன இயந்திரம், பழங்கள் அடுக்கி வைக்கப்படும் மர பீரோக்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் எரிந்து சேதமாகின. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP