கும்பகோணத்தில் தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் ஐந்தாவது மாநில செயற்குழு 

கும்பகோணத்தில் தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் ஐந்தாவது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 | 

கும்பகோணத்தில் தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் ஐந்தாவது மாநில செயற்குழு 

கும்பகோணத்தில் தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் ஐந்தாவது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கும்பகோணத்தில் தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் ஐந்தாவது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் ஓரியண்டல் பள்ளியில் மாநில சிறப்பு தலைவர் ஆறுமுகம் தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசியபோது ஜாக்டோ-ஜியோ போராட்டங்களில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளி கல்வித்துறை நீக்க வேண்டும் 2019 இல் நடத்தப்பட வேண்டிய மாநில மாறுதல் கலந்தாய்வினையும் விரைந்து நடத்த வேண்டும் அரசாணை 266இல் கடைசி பாடமாக வைக்கப்பட்டுள்ள தமிழ்பாடம் பல்வேறு கட்ட போராட்டங்களின் விரைவாக நான்காவது படமாக மாற்றப்பட்டுள்ளது. 

அதனை முதல் படமாக மாற்றி அமைக்க வேண்டும் போட்டித் தேர்வுகளுக்கு பயனளிக்கக்கூடிய கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பினை அளிக்க வாய்ப்பு கொடுக்கிற தமிழ் மொழி பாடத்திட்டத்திற்கு இரண்டு தாள்கள் என்பதை ஒரே தாளாக மாற்றி அமைக்கப்பட்ட அரசாணை ரத்து செய்து இரண்டு தாள்களை தொடர ஆவன செய்ய வேண்டும் பணியிட நிர்ணயத்தின் போது 6 முதல் வகுப்பு வரை குறைந்த அளவு எட்டு பணியிடங்கள் என்பதை ஐந்து பணியிடங்களாக குறைத்து பணிநிரவல் செய்வதை கைவிட வேண்டும் பழைய நிலையில் 8 பட்டதாரி ஆசிரியர்களே தொடர வேண்டும் சென்னையில் உள்ள தலைமை நிலையத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மெட்ரோ தண்ணீர் வரத்து இல்லை.

ஆதலால் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் மின் மோட்டார் அமைக்க வேண்டும் அரசு உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் அனைத்து மாவட்டங்களுக்கும் கழக விதிகளின் அடிப்படையில் ஒரே அளவு  சமச்சீராக அதாவது பத்து பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் நாகேந்திரன் பொருளாளர் கோவிந்தன் மாவட்டச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஏராளமான தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP