கோவையில் 108 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு!

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பினால் 108 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 | 

கோவையில் 108 பேருக்கு  காய்ச்சல் பாதிப்பு!

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பினால் 108 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதையடுத்து சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவதை தடுத்தது. அதேபோல காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது. இது போன்ற தொடர் செயல்பாடுகளால் நோய் பாதிப்புகளும் குறைந்தது.

தற்போது, தென்மேற்குப் பருவமழையை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. இதனை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவை அரசு மருத்துவக் கல்லூரியிலும் காய்ச்சலுக்கென்றே பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 14 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல காய்ச்சல் பாதிப்புக்கு 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக மருத்துவமனையின் முதல்வர் அசோகன் செய்தியாளரிடம் கூறுகையில், காய்ச்சலால் யாரேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அனுக வேண்டும்.கோவை அரசு மருத்துவமனையை பொறுத்தவரை 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் தயார் நிலையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP