கஞ்சா போதையில் மகனை கொலை செய்த தந்தை!

கும்பகோணம் அருகே கஞ்சா போதையில் தந்தையே மகனை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 | 

கஞ்சா போதையில் மகனை கொலை செய்த தந்தை!

கும்பகோணம் அருகே கஞ்சா போதையில் தந்தையே மகனை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசலாற்று வெளிநடப்பு ரெங்கர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (40). இவர் தச்சு தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு அவரும், அவரது தந்தை சங்கரும் ஒன்றாக சேர்ந்த மது அருந்திவிட்டு கஞ்சா அடித்ததாக கூறப்படுகிறது.

இன்று காலை அவர்களின் வீட்டின் அருகே உள்ளவர்கள் மாடிக்கு சென்ற போது முத்துக்குமார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிவேல் மற்றும் போலீசார் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேற்றிரவு போதையில் சங்கருக்கும் அவரது மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சங்கர் அவரது மகனை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள சங்கரை போலீசார் தேடி வருகின்றனர். 

கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் மீது 2018 ஆண்டு மேற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP