பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது!

விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை கொன்று புதைத்தை தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 | 

பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது!

விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை கொன்று புதைத்தை தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவர் வரதராஜன். இவருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத வரதராஜன் பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை கொன்று சுந்தரேசபுரம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் புதைத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை கொன்ற தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் குழந்தை என்பதற்காக பெற்ற குழந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP