ஆமை வேகத்தில் சென்ற அதிவிரைவு குளிர்சாதன பேருந்து - சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்!

திருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக சென்ற தனியார் அதிவிரைவு குளிர்சாதன பேருந்து மிகக் குறைந்த வேகத்தில் சென்றதால், ஆத்திரமடைந்த பயணிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .
 | 

திருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக சென்ற தனியார் அதிவிரைவு குளிர்சாதன பேருந்து  பேருந்தில் 40 க்கும் மேற்பட்ட பணிகள் பயணித்தனர். 

இந்நிலையில், இந்த பேருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் நெ.1 டோல்கேட் வரையுள்ள 14கிலோ மீட்டர் தூரத்தினை கடக்க சுமார் 2மணிநேரம் கடந்துள்ளது.  இதற்கு காரணமாக பேருந்தில் இருந்த ஏசி கம்ப்ரசர் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பேருந்து வேகமாக செல்லாததால் ஆத்திரமடைந்த அப்பேருந்தில் பயணித்த பயணிகளை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் மற்றும் லால்குடி காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு, மீண்டும் அதே பேருந்தில் பயணித்தனர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP