போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் கைது

கரும்பு தொகையை இதுவரை தராமல் ஏமாற்றும் தனியார் சக்கரை ஆலை உரிமையாளரை கண்டித்து, சென்னை கோட்டூர்புரம் ரஞ்சித் சாலையில் உள்ள சக்கரை ஆலை உரிமையாளரின் இல்லத்திற்கு முன்னால், அய்யாக்கண்ணு தலைமையிலான விவாசய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
 | 

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் கைது

சென்னையில் அனுமதியின்றி  போரட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கரும்பு தொகையை நிலுவையில் வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளரை கண்டித்து, சென்னை கோட்டூர்புரம் ரஞ்சித் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்னால், அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் , போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி கூறியதால், அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு, "கடந்த 26 மாதங்களாக தங்களுக்கு வழங்க வேண்டிய 420 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டியுள்ளது. அத்துடன், "கட்டிங் சார்ஜ்" என்று கையெழுத்து பெற்று, எங்கள் ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு லட்சம் முதல் பல லட்சம் வரை ஆலை நிர்வாகம் வங்கிகளில் கடன் பெற்றுள்ளது. இதனால் எங்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதுடன், வங்கியில் இருக்கும் எங்களது நகைகளை ஏலத்தில் விடுவதாக வங்கிகள் நோட்டீஸ் அனுப்புகின்றனர். இதற்கு காரணமான ராம் தியாகராஜனை கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP