கள்ளத் தொடர்பு விவகாரம்: அண்ணியை கத்தியால் குத்திய கொழுந்தன்!

கள்ளத் தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் அண்ணியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கொழுந்தனை காவல்துறையினர் கைது செய்தனர்.
 | 

கள்ளத் தொடர்பு விவகாரம்: அண்ணியை கத்தியால் குத்திய கொழுந்தன்!

கள்ளத் தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் அண்ணியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கொழுந்தனை காவல்துறையினர் கைது செய்தனர். 

சென்னை கிண்டி, மசூதி காலனி 11வது தெருவை சேர்ந்தவர் பானுப்பிரியா(27). இவரது கணவர் சுரேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். இதனால் பானுப்பிரியா 4ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பு படிக்கும் தனது 2 மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். 

அவரது கணவரின் தம்பி மணிகண்டன்(28) என்பவர் திருமணமாகி நந்தம்பாக்கத்தில் அவருடைய மனைவியுடன் வசித்துவருகிறார். ஆனால், மணிகண்டனுக்கும் அவரது அண்ணன் மனைவியான பானுப்பிரியாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பானுப்பிரியா மற்றொருவருடன் பழக்கத்தில் இருந்ததால் மணிகண்டன் பலமுறை அண்ணியை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இன்று காலை மணிகண்டன் பானுப்பிரியாவின் வீட்டுக்கு சென்று அவரை கொலை செய்யும் நோக்கோடு கத்தியால் சராமாரியாக குத்தியுள்ளார்.

இதில் பானுப்பிரியாவின் கழுத்து, உடம்பு, கை,கால் உட்பட ஏழு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் துடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மடக்கிப் பிடித்தனர். மேலும் இது குறித்து கிண்டி காவல் நிலையத்திற்கு தகவலும் கொடுத்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பானு பிரியாவை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP