எறும்பீஸ்வரர் ஆலய தெப்ப உற்சவம்!

திருச்சி அருள்மிகு எறும்பீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.
 | 

எறும்பீஸ்வரர் ஆலய தெப்ப உற்சவம்!

திருச்சி அருள்மிகு எறும்பீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர். 

திருச்சி திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் ஆலயம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றதும், திருமாலும், பிரம்மனும், ரிஷிகளும் வழிபட்டதும், இந்திரனும், தேவரும் எறும்பு வடிவம் கொண்டு வழிபட்ட திருத்தலமாகும். 1100 ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட பிரசித்திபெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

எறும்பீஸ்வரர் ஆலய தெப்ப உற்சவம்!

அந்தவகையில், இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ச்சியாக கடந்த 17ஆம் தேதி வைகாசி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று பிரம்ம தீர்த்தமாகிய சன்னதி திருக்குளத்தில் தெப்போற்சவம் வெகுசிறப்புடன் நடைபெற்றது. 

எறும்பீஸ்வரர் ஆலய தெப்ப உற்சவம்!

நறுங்குழல் நாயகியுடன், எறும்பீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்போற்சவம் கண்டருளினர். 3முறை வலம்வந்து பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மூலஸ்தானத்தைச் சென்றடைந்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP