ஈரோடு:  பேருந்திற்காக காத்திருந்த பெண்ணிடம் இருந்து 1.80 லட்சம் ரொக்கபணம்  திருட்டு !

அன்னூர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த பெண்ணிடம் இருந்து 1.80 லட்சம் ரொக்கபணம் திருடபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

 ஈரோடு:  பேருந்திற்காக காத்திருந்த பெண்ணிடம் இருந்து 1.80 லட்சம் ரொக்கபணம்  திருட்டு !

அன்னூர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த பெண்ணிடம் இருந்து 1.80 லட்சம் ரொக்கபணம் திருடபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி சேர்ந்த செந்தில்குமார் இவர் கோவையில் உள்ள செல்போன் டவர்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.  இவர் இன்று தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் அன்னூர் வந்தனர். 

குழந்தை தூங்கியதால் அவரது மனைவி பிரபாவையும் குழந்தையும் பேருந்தில் வர சொல்லிவிட்டு  செந்தில்குமார் தனது இருசக்கர வாகனத்தில் கோவை சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்து நிலையத்தில் காத்திருந்த பிரபா கூட்ட நெரிசல் காரணமாக  2 பஸ்களில் மாறி மாறி  ஏற முயன்றபோது தனது கைப்பையில்  வைக்கப்பட்டிருந்த 1.80  லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

 பின்னர் பணம் திருடபட்டது குறித்து அறிந்த பிரபா  இது குறித்து தனது கணவர் செந்தில்குமார் மூலம் அன்னூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். புகாரினை  தொடர்ந்து  அன்னூர் போலீசார் பேருந்து நிலையம் வந்து சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அங்கு வைக்கபட்ட  கேமராக்கள் சரிவர எதுவுமே வேலை செய்யாமல் , பயனற்று இருந்ததால், ஏமாற்றமடைந்த காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் நின்றவர்களிடம் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

அன்னூர் போலீஸ் மூலம் நகர பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட கேமராக்கள் வைக்கபட்டுள்ள நிலையில் அவை ஏதுவுமே செயல்படாமல் இருப்பதால் குற்றவாளிகளுக்கு பயம் இன்றி இதுபோன்று செயல்படுவதாக கூறும் அன்னூர் பகுதி மக்கள் அதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP