மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்!

அறுந்து விழுந்த மின் கம்பிகள் ஒன்றையொன்று உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து விட்டு சென்ற மின் ஊழியர்களின் அலட்சியமான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை அருகே உள்ள விளவங்கோடு பகுதியில் கடந்த 16ஆம் தேதி மாலை தென்னை மட்டை விழுந்து மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனை இரவு சரிசெய்ய வந்த மின் ஊழியர்கள் மின்கம்பிகளை முறையாக சரிசெய்யாமல் மின் கம்பத்தில் சுற்றி வைத்துவிட்டு கம்பிகள் ஒன்றையொன்று உரசாமல் இருப்பதற்கு ரப்பர் செருப்பை வைத்து விட்டு சென்றுள்ளனர். மறுநாள் காலை மின் ஊழியர்கள் சரிசெய்ய வராததால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP