மின்வாரிய பணியாளர் தற்கொலை : போலீஸ் விசாரணை

கும்பகோணத்தில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மின்சார வாரியம் தற்காலிக பணியாளர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மின்வாரிய பணியாளர்  தற்கொலை : போலீஸ் விசாரணை

 மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மின்சார வாரிய தற்காலிக பணியாளர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆவூர் வீரணம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. 30 வயதான இவர், வலங்கைமான் மின்சார வாரியத்தில் லயன்மேன் பணியில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி, கும்பகோணம் தாலுகா கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி வயது (21).

கடந்த இரு மாதங்களாக ராஜாவுக்கும், செல்வராணிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதன் காரணமாக செல்வராணி தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். 

செல்வராணியின் தாயார் அஞ்சம்மாள் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். இதை அறிந்த ராஜா, கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லூரில் உள்ள தனது மாமியாரை நலம் விசாரிப்பதற்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்படவே, மனமுடைந்த  ராஜா விஷமருந்தியுள்ளார். அருகில் இருந்த கிராம மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ராஜாவை எடுத்து சென்றுள்ளனர். ஆனால், ராஜா வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்னர். தகவலறிந்த சுவாமிமலை போலீஸார், ராஜாவின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP