தேர்தல் பறக்கும் படை தூங்கும் படையாக செயல்படுகிறது: அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை, தூங்கும் படையாக தான் செயல்பட்டு வருவதாகவும், முற்றிலும் செயலிழந்து விட்டதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

தேர்தல் பறக்கும் படை தூங்கும் படையாக செயல்படுகிறது: அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை, தூங்கும் படையாக தான் செயல்பட்டு வருவதாகவும், முற்றிலும் செயலிழந்து விட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க  வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து பழைய வண்ணாரபேட்டை பகுதிகளில் அமைச்சர் ஜெயக்குமார் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பாண்டியன் திரையரங்கம் அருகில் அமைச்சர் மற்றும் வேட்பாளர் வந்த போது, இஸ்லாமியர்கள் அவர்கள் வழக்கம்படி திருமண விழாவிற்கு மாப்பிள்ளையை வரவேற்க அணிவிக்கும் "பத்தி " மாலை மற்றும் தொப்பி அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்றைய தினம் தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமமுக மற்றும் திமுகவினர் ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்துள்ளதாகவும், இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் பறக்கும் படை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் ஆணைய அதிகாரிகளால் வழங்க வேண்டிய பூத் சிலிப்பை அமமுகவினரிடம் கொடுத்துவிட்டதாகவும், அவர்கள் அதை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் போது பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர், இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டு ஆர்-6 காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியதன் மூலம் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்ற விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் டி.வி.உடைப்பது போல் கொடுத்த விளம்பரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சினிமாவில் நடிப்பதை போல் கமலஹான் அரசியலிலும் செய்து வருவதாகவும், இதனை மக்கள் பார்பார்களே தவிர ஓட்டு போட மாட்டார்கள் எனவும் விமர்சித்தார். இந்த விளம்பரத்தை பார்த்து குழந்தைகளும் டி.வியை உடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP