குடிபோதையில் பயணிகளிடம் தகராறு! அட்டூழியம் செய்த நடத்துனர்!!

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (32). இவர் கோவையில் இருந்து திருப்பூருக்கு இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபரிந்து வந்தார்.
 | 

குடிபோதையில் பயணிகளிடம் தகராறு! அட்டூழியம் செய்த நடத்துனர்!!

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (32). இவர் கோவையில் இருந்து திருப்பூருக்கு இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபரிந்து வந்தார். வழக்கம் போல் கோவையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு பேருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, பணியில் இருந்த நடத்துனர் ரவீந்திரன் பேருந்தில் இருந்த பயணிகளை தகாத முறையில் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து பயணிகள் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் பேருந்தை மடக்கி பிடித்து, நடத்துனர் ரவீந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரவீந்திரன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், ரவீந்திரனின் கண்டக்டர் உரிமத்தை 6 மாதம் ரத்து செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP