குடிபோதையில் தகராறு; ஆத்திரத்தில் 8 பேர் மீது ஆசிட் வீச்சு

சென்னை நெற்குன்றம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 8 பேர் மீது அமிலம் வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 | 

குடிபோதையில் தகராறு; ஆத்திரத்தில் 8 பேர் மீது ஆசிட் வீச்சு

சென்னை நெற்குன்றம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 8 பேர் மீது ஆசிட் வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை நெற்குன்றம் முனியப்பா நகர் 3வது தெருவில் வசிப்பவர் கன்னியப்பன், இவர் வெள்ளிப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். அவரது வீட்டின் 3வது மாடியில் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு அழகுமுத்து(38), கருப்பசாமி(32), வாஞ்சிநாதன்(18), வீரமணி(21), முருகன்(23) உட்பட 8 பேரும் வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்தியபடி கூச்சலிட்டுக் கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற கன்னியப்பனும் அவரது மனைவி ரஞ்சினி மற்றும் மனைவியின் அண்ணன் ஆகியோர்  ஏன் கூச்சலிட்டு மற்றவர்களை தொந்தரவு செய்கிறீர்கள் என கண்டித்துள்ளனர்.

அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாரியுள்ளது. இதில் அந்த 8 பேரும் கன்னியப்பன், அவரது மனைவி மற்றும் மனைவியின் அண்ணன் ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கன்னியப்பன் வீட்டினுள் சென்று தாழிட்டுக்கொண்டு தனது வீட்டில் வைத்திருந்த வெள்ளிப் பொருட்களுக்கு பாலிஷ் அடிக்கும் அமிலத்தை தண்ணீரில் கரைத்து ஜன்னல் வழியாக வெளியில் நின்றிருந்த 8 பேர் மீதும் ஊற்றியுள்ளார்.

இதில் உடல் வெந்து அனைவரும் அலறியுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அனைவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், 8 பேர் தாக்கியதில் காயமடைந்த ரஞ்சினியின் அண்ணனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக கன்னியப்பனை கைது செய்துள்ள கோயம்பேடு காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP