அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு மருந்து இல்லாத அவலம்

சேலத்தில் வெறி நாயால் கடிபட்ட 30 க்கும் மேஎற்பட்டோருக்கு, உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் மருத்துவமனை வாசலில் அமர வைத்ததுடன், வெறிநாய் கடிக்கு கூறிய மருந்து இருப்பு இல்லை என, மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
 | 

அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு மருந்து இல்லாத அவலம்

சேலம், கிச்சிப்பாளையம் பகுதியில் இன்று காலை வெறிநாய் ஒன்று அப்பகுதியில் வந்து கொண்டிருந்த வயதானவர்கள், சைக்கிளில் சென்றவர்கள், பாதசாரிகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வரை வெறித்தனமாக கடித்து குதறியது. காயமடைந்த வயதானோர் மற்றும் பொதுமக்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனையில் வந்துள்ளனர்.ஆனால், இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் மருத்துவமனை வாசலில் அமர வைத்ததுடன், வெறிநாய் கடிக்கான மருந்து இருப்பு இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. 

மேலும், மருத்துவமனையின் அலட்சிய போக்கால் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்கு  பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.  

அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு மருந்து இல்லாத அவலம்

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில் , "சேலம் மாவட்டத்தில் நாய் கடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட‌வில்லை. காலை 8 மணிக்கு நாங்கள் நாய்க்கடிக்கு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். உரிய சிகிச்சை அளிக்காமல் மருந்து இல்லை என கூறி எங்களை சுமார் இரண்டு மணி நேரமாக காக்க வைத்தனர்" என்று வேதனையுடன் தெரிவித்தனர். 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP