கோவை  அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பெட்ரோலை குடித்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி!

கோவை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஒட்டுனராக பனிபுரிந்து வரும் ரமேஷ் குமார் என்பவர் மாதாந்திர வருகை பதிவேட்டில் முறைகேடு நடப்பதாக கூறி பணிமனை முன்பாக பெட்ரோலை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்
 | 

கோவை  அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பெட்ரோலை குடித்து ஓட்டுநர் தற்

கோவை  அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஒட்டுனராக பனிபுரிந்து வரும்  ரமேஷ் குமார் என்பவர் மாதாந்திர வருகை பதிவேட்டில் முறைகேடு நடப்பதாகக் கூறி  பணிமனை முன்பாக பெட்ரோலை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

மாவட்டம் அன்னூர் அடுத்த குன்னத்தூராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ரமேஷ் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பர்மிஷன் எடுத்துக்கொண்டு  சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று அவருக்கான மாதாந்திர வருகை பதிவேடு வழங்கப்பட்டுள்ளது.

அதில் பர்மிஷன் போட்டு விட்டு சென்ற தனக்கு விடுமுறை போட்டிருப்பது குறித்து பணிமனை அதிகாரிகளுடன் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்தவர்கள் உரிய பதில் தராததால் கோவை சாலையில் உள்ள அரசு பணிமனை முன்பு திடீரென பெட்ரோலை குடித்த அவர் மேலே ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP