கடும் வறட்சி காலத்தில் ஆறு போல் ஓடி வீணான குடிநீர்!

கடும் வறட்சியான காலத்தில், குடிநீர் இன்றி தவித்து வரும் காலக்கட்டத்தில் குடிநீர் ஆறுபோல் ஓடி வீணான காட்சி அனைவரது உள்ளத்தையும் வாட்டியது.
 | 

கடும் வறட்சி காலத்தில் ஆறு போல் ஓடி வீணான குடிநீர்!

கடும் வறட்சியான காலத்தில், குடிநீர் இன்றி தவித்து வரும் காலக்கட்டத்தில் குடிநீர் ஆறுபோல் ஓடி வீணான காட்சி அனைவரது உள்ளத்தையும் வாட்டியது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரில் சர்ச் அருகே வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதியில் நேற்று திடீரென சாலையில் இருந்து நீர் பீறிட்டு வெளியேறியது. சிறிது நேரத்தில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து நீர் வெளியேற அந்த பகுதியே குளம் போல் காட்சி அளித்தது. 

கடும் வறட்சி காலத்தில் ஆறு போல் ஓடி வீணான குடிநீர்!

இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். நகராட்சி அதிகாரிகள் வந்து பார்த்த போது காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிக அளவில் காவிரி நீர் பெருக்கெடுத்து வீணாக வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து தண்ணீர் செல்வதை நிறுத்திவிட்டு, குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். 

கடும் வறட்சி காலத்தில் ஆறு போல் ஓடி வீணான குடிநீர்!

 நகரின் மையப்பகுதியில் அதிக வாகனங்கள் செல்லும் பகுதியில் திடீரென சாலையில் இருந்து நீர் பெருக்கெடுத்து  ஓடியது அனைவரையும் சற்று திரும்பபார்க்க வைத்ததுடன், கடும் வறட்சியான நேரத்தில் குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் முன்வைத்துள்ளனர்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP