மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி! 

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை வர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
 | 

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி! 

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை வர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள ஆர்.எஸ்.வையம்பட்டி இந்திரா காலணியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.  

தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிக்கு ஆளான மக்கள் இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அந்த கூறப்படுகிறது. இதனால்  ஆத்திரமடைந்த மக்கள் காலிக்குடங்களுடன் வையம்பட்டி மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதையறிந்த வையம்பட்டி போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்களுக்கும் – போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

பின்னர் கூடுதல் குழாய்கள் அமைத்து முறையான குடிநீர் கிடைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP