வாட்ஸ் அப் தகவல் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்.. ஆபத்தில் குழந்தையின் உயிர்..

கோவை தனியார் மருத்துவமனையில் வாட்ஸ்அப் தகவல் மூலம் பிரசவத்திற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களால் குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 | 

வாட்ஸ் அப் தகவல் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்.. ஆபத்தில் குழந்தையின் உயிர்..

கோவை  தனியார் மருத்துவமனையில் வாட்ஸ்அப் மூலம் பிரசவத்திற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களால் குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கோவை ரத்தினபுரி அருகே வசித்து வருபவர் ரங்கராஜ் மற்றும் நித்யா தம்பதியினர். இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தனது மனைவிக்கு புலியகுளம் அருகே உள்ள ஜெனிசிஸ் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 1-ந் தேதி பிரசவத்திற்காக நித்யாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் பிரசவத்திற்கான சிகிச்சை அளிக்கும் பொழுது மருத்துவர் சந்திரகலா இல்லாமல் உதவி மருத்துவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். மேலும் சிகிச்சையின்போது, மருத்துவர்கள் முதன்மை மருத்துவர் சந்திராவிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்களையும், புகைப்படங்களை அனுப்பி சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து குழந்தையின் உயிருக்கு பாதிப்பை ஏற்பட்டதால் மருத்துவர்கள், அவர்களுக்கு சாதகமான மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர், தற்போது குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

வாட்ஸ் அப் தகவல் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்.. ஆபத்தில் குழந்தையின் உயிர்..

ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளத்தினால் ஜெனிசிஸ் மருத்துவமனை முன்பு பெற்றோர் மற்றும் உறவினர்கள்  சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வாட்சப் பிரசவம் குறித்து  மருத்துவரிடம் கேட்டபோது இம்மாதிரியான செயல்கள் இங்கு நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP