4வது நாளாக தொடரும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில், 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 4வது நாளாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 | 

4வது நாளாக தொடரும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில், 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 4வது நாளாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஊதிய உயர்வு மற்றும் அதிகப்படியான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போராட்டம் இன்று 4வது நாளை எட்டியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்தவமனை மருத்துவர்கள் தொடர்ந்து 4வது நாளாக தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் இவ்விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP