மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை தேவை: எம்.எல்.ஏ

மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
 | 

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பெண்கள் உள்பட 44 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 3 பெண்கள் மற்றும் ஒரு மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் அவர்களை சட்டமன்ற உறுப்பினர்.  அன்பழகன், நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவ கண்காணிப்பாளரிடம் கேட்டறிந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன் எம்.எல்.ஏ, நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவர்கள் தொடங்கியுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும் என்றும் அன்பழகன் கேட்டுக்கொண்டார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP