நியூசிலாந்து போல திமுக தோற்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தோற்பது போல் இருந்து நிலையில் நியூசிலாந்து தோற்றது போல திமுகவும் தோற்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தமிழச்சி தங்கப்பாண்டியன் என்னை பொய்யர் என கூறிவதை குறிப்பிட்டு, திமுகவினர் தான் பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்தவர்கள் என விமர்சித்தார். மேலும், தமிழச்சி தங்கப்பாண்டியன் மக்களவையில் தூங்கும் படம் வெளியாகி உள்ளதாகவும், அவரை நம்பி ஓட்டு போட்ட தென் சென்னை மக்கள் பாவம் எனவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி தோற்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தது. ஆனால் நியூசிலாந்து அணி தோற்றுவிட்டது. அது போன்று அரசியலிலும் திமுக வெல்வது போன்ற ஒரு மாயை இருந்தாலும் இறுதியில் அதிமுகவே வெல்லும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP