பேரிடர் விழிப்புணர்வு: தத்ரூபமாக செயல் விளக்கம் அளித்த தீயணைப்பு துறையினர்

திருவிடைமருதூரில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு வட்டார தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
 | 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு  வட்டார தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறை சார்பில் ஆடுதுறை வீரசோழன் ஆற்றுப்பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரும் ஆபத்திலிருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்து தத்துரூபமாக  தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்தனர். இதில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்றும் கடும் புயல், வெள்ள அபாயத்திலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

பேரிடர் விழிப்புணர்வு: தத்ரூபமாக செயல் விளக்கம் அளித்த தீயணைப்பு துறையினர்

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டனர். மேலும் ஆடுதுறை வீரசோழன் ஆற்றுப் பகுதியிலிருந்து பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வருவாய்த்துறையினர், பேரூராட்சி ஊழியர்கள், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட  ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP