தற்கொலை செய்த விவசாயி குடும்பத்திற்கு நிதியுதவி செய்த இயக்குனர்கள்!

கஜா புயல் தாக்கியதில் தனது தென்னதோப்பை இழந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர் இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் மற்றும் திருமுருகன்.
 | 

கடந்த வாரம், தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. வீடுகள், மரங்கள், கட்டிடங்கள் என பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டன. நிவாரண பணிகளை தமிழக அரசு உடனடியாக முடுக்கி விட்டாலும், நிவாரண உதவிகள் குறைவாக உள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் இருந்து அதிருப்தி எழுந்துள்ளது. 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜனுக்கு சொந்தமான 5 ஏக்கர் தென்னந்தோப்பு, கஜா புயலால் கடுமையாக முற்றிலும் சேதமடைந்தது. இதனால், பெரும் சோகத்திற்கு ஆளான சுந்தர்ராஜன், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம்  தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் மற்றும் திருமுருகன் ஆகியோர் ஒரத்தநாடு பகுதிக்கு சென்று, இறந்த சுந்தர்ராஜன் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்தனர். அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாகவும் வழங்கியுள்ளனர்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP