பாழடைந்த வீட்டில் பீரங்கி குண்டு கண்டெடுப்பு!

கோவையில் பாழடைந்த வீட்டில் இருந்து இராணுவத்தில் பயன்படுத்தும் பீரங்கி குண்டு ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
 | 

பாழடைந்த வீட்டில் பீரங்கி குண்டு கண்டெடுப்பு!

கோவையில் பாழடைந்த வீட்டில் இருந்து  இராணுவத்தில் பயன்படுத்தும் பீரங்கி குண்டு ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

கோவை ராம்நகர் பகுதியில் நேற்று அதிகாலை தங்க நகைக் கடை அதிபர் லிஜோ சுங்கத் என்பவரது வீட்டின் அருகே இருந்த சந்தனமரத்தை மர்ம நபர்கள்  வெட்டி கடத்த  முயற்சி செய்தனர். அப்போது காவலாளி சப்தம் போடவே சந்தனமரத்தை போட்டு விட்டு மர்ம கும்பல் தப்பி ஒடியது.

இதுகுறித்து கோவை காட்டூர் காவல் நிலைய போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்து விசராணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இன்று அப்பகுதியில் இருந்த ராம்ஜி என்பவருக்கு சொந்தமான பாழடைந்த வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது பீரங்கி குண்டு போன்ற வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதனை கைப்பற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், அந்த வெடிபொருள் 30 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதும், இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பீரங்கி குண்டு என்பதும் தெரிய வந்துள்ளது. 

ராம்ஜி குடும்பத்தினருடன் பல ஆண்டுகளாக வெளியூரில் வசித்து வரும் நிலையில், யாரும் பயன்படுத்தாத வீட்டில் இருந்து பீரங்கி குண்டு கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து காட்டூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராம்ஜியின் உறவினர்கள் இந்திய இராணுவத்தில் பணியாற்றியபோது பீரங்கி குண்டை கொண்டு வந்து வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP