துப்புரவு பணியாளர்களுக்கு முழு ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றும் நிறுவனம்!

ஊதியம் முமுமையாக வழங்காமல் ஏமாற்றி வரும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை மாநகராட்சி பள்ளிகளில் துப்புரவு பணி செய்து வரும் பணியாளர்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்தனர்.
 | 

துப்புரவு பணியாளர்களுக்கு முழு ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றும் நிறுவனம்!

முழுமையான சம்பளம் வழங்காத நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்தனர்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளி, அரசுப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் துப்பரவு பணிக்கு சென்னையை சேர்ந்த எஸ்.டபிள்யூ.எம்.எஸ் என்ற நிறுவனம் ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது. சுமார் 55 பள்ளிகளில் 100க்கும் மேற்பட்டவர்கள்  துப்பரவு பணி செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு நெல்லை மாவட்ட  நிர்வாகம் ஆணைப்படி வழங்கப்படும் சம்பளம் முழுமையாக சென்று சேர்வதில்லை எனவும், சரியான சம்பளம் தரும் படி கேட்டால் நிறுவனம் எந்த பதிலும் தராமல் 2 மாத சம்பளத்தை பிடித்தம் செய்து வைத்துள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், இது குறித்து கேள்வி கேட்கும் மேற்பார்வையாளர்களை வேலையை விட்டு நீங்கும்படி மிரட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர்.  

துப்புரவு பணியாளர்களுக்கு முழு ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றும் நிறுவனம்!

இந்நிலையில்,  ஒன்று திரண்ட பணியாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்தை  சந்தித்து  தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கும் சம்பளத்தை முறையாக கிடைக்கவும், அனைவருக்கு தொடர்ந்து வேலை கிடைக்கவும்  நடவடிக்கை எடுக்கும் படி மனு அளித்தனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP