படியில் பயணம் நொடியில் மரணம்.. சென்னையில் நிகழ்ந்த சோகம்

படியில் பயணம் நொடியில் மரணம்.. சென்னையில் நிகழ்ந்த சோகம்
 | 

படியில் பயணம் நொடியில் மரணம்.. சென்னையில் நிகழ்ந்த சோகம்

சென்னை தி.நகரில் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதும் இதனால் மோதல் ஏற்படும் உண்டு.

படியில் பயணம் நொடியில் மரணம்.. சென்னையில் நிகழ்ந்த சோகம்

மேலும் மாணவர்கள் அடிக்கடி பேருந்தில் பயணிக்கும்போதே பட்டா கத்தியுடன் மோதுவதும் சென்னையில் நிகழ்ந்து வருகிறது. பேருந்தில் படிக்கட்டில் தொங்கியப்படி சாகசம் செய்யும் நடிவடிக்கையில் சில மாணவர்கள்  ஈடுபடுவதும் உண்டு. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் சென்னையில் அரசு பேருந்தில் சென்ற மாணவர் தவறி விழுந்ததில் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

படியில் பயணம் நொடியில் மரணம்.. சென்னையில் நிகழ்ந்த சோகம்

தி.நகரில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்த சரண் என்ற மாணவர், சென்னை தி.நகர் பணிமனையில் இருந்து பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார். வேளச்சேரியைச் சேர்ந்த சரண் படியில் நண்பர்களுடன் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக சக்கரத்தில் சிக்கி மாணவர் சரண் உயிரிழந்தார். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP