கண்காணிப்பு கேமராக்களால் 50% குற்றங்கள் குறைந்துள்ளது: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சியில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களால் 50 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

ஸ்ரீரங்கம், காவிரி பாலம், மாம்பழச்சாலை, அம்மா மண்டபம், ராஜகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் 90 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேரமும் கண்காணிக்கபடுவதற்கான நவீன கட்டுப்பாட்டு அறை இன்று திறக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் உள்ள கட்டுபாட்டு அறையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி மாநகரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களால் 50 சதவீத குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

திருச்சி மாநகரில் ஏற்கனவே 1,178 கேமராக்கள் பொருத்தபட்டுள்ளன. தற்போது ஸ்ரீரங்கம் பகுதியில் அமைக்கபட்டுள்ள 90 கேமராக்களும் சேர்த்து  மொத்தம் 1,268 கண்காணிப்பு கேமராக்கள் தற்போது செயல்பட உள்ளது. 2019 அக்டோபர் மாதம் வரை மொத்தம் 376 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமரா மூலம் 86 சதவீத வழக்குகளின் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கண்காணிப்பு கேமராக்களால் 50% குற்றங்கள் குறைந்துள்ளது: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP