ராஜராஜசோழன் உருவ சிலைக்கு மரியாதை

கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜசோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் அவரது சதய விழாவை முன்னிட்டு ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.
 | 

ராஜராஜசோழன் உருவ சிலைக்கு மரியாதை

கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜசோழன் சமாதி அமைந்துள்ள இடத்தில் அவரது சதய விழாவை முன்னிட்டு ஏராளமானோர் வழிபாடு செய்தனர். ராஜராஜசோழன் உருவ சிலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜசோழன் சமாதி உள்ளது. இதில் சிவலிங்கம் ஒன்று மட்டும் உள்ளது .இன்று ராஜராஜ சோழனின் 1034 வது சதய விழாவை முன்னிட்டு ராஜராஜசோழன் சமாதி அமைந்துள்ள உடையாளூரில் ஏராளமானோர் சமாதியை வழிபட்டு வருகின்றனர். ராஜராஜசோழனின் மூன்றடி உயரமுள்ள ஐம்பொன் சிலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக சமாதி அமைந்துள்ள இடத்தில் சோழர்களின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. பல்வேறு அமைப்பினர் ராஜராஜசோழன் சமாதியினை வழிபட்டு வருகின்றனர் . இதனால் உடையாளூரே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP