நீதிமன்றம் முன்பு இளைஞர்களை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது!

கோவை நீதிமன்றம் முன்பு இரண்டு வாலிபர்களை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிசென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 | 

நீதிமன்றம் முன்பு இளைஞர்களை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது!

கோவை நீதிமன்றம் முன்பு இரண்டு வாலிபர்களை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிசென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம்  உப்பிலி பாளையம் சிக்னல் அருகே நேற்று நடந்து சென்று கொண்டிருந்த பிரதீப், தமிழ் என்ற இரண்டு வாலிபர்களை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காயமடைந்த இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து ரேஸ் கோர்ஸ் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த பிரதீப், தமிழ் ஆகியோரை முன்விரோதம் காரணமாக தனபால், ஹரி, சதீஷ் உள்பட 4 பேர் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP