ரூ.2.5 கோடியுடன் சீட்டு நடத்தி கம்பி நீட்டிய தம்பதி! கதறும் பொதுமக்கள்!

சீட்டு நடத்தி ஏமாற்றிய ராஜஸ்தான் தம்பதி.. இரண்டரை கோடி ரூபாயுடன் சொந்த ஊருக்கு ஓட்டம்
 | 

ரூ.2.5 கோடியுடன் சீட்டு நடத்தி கம்பி நீட்டிய தம்பதி! கதறும் பொதுமக்கள்!

சென்னை மதுராந்தகம் அடுத்த பூதூர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ராஜஸ்தானை சேர்ந்த ராம்தேவ் (50) என்பவர் அடகுக்கடை நடத்தி வந்தார். அவர், மதுராந்தகம் அருகே உள்ள மேலவலம்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து  குடும்பத்துடன் தங்கினார். கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டு சீட்டு நடத்திய ராம்தேவ், பொதுமக்களிடம் சீட்டு பிடித்து வந்துள்ளார். பொதுமக்கள் மாதம் 1000, 2000 என 12 மாதங்களுக்கு செலுத்தினால், தங்கம் மற்றும் மளிகை உள்பட  பல பொருட்கள் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த 500 பேர், ராம்தேவிடம் சீட்டு மற்றும் பண்டு கட்டினர்.  பின்னர், 12 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த தீபாவளியின்போது சீட்டு கட்டியவர்களுக்கு தரவேண்டிய நகை மற்றும் பொருட்களை அவர் கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

ரூ.2.5 கோடியுடன் சீட்டு நடத்தி கம்பி நீட்டிய தம்பதி! கதறும் பொதுமக்கள்!

ஆனால் தீபாவளி முடிந்தும் பொருட்களை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில  தினங்களாக அவரது அடகுக்கடை திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால், பொதுமக்கள் சந்தேகமடைந்தனர். பின்னர், அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால்  அதிர்ச்சியடைந்தனர். அவர், குடும்பத்துடன் தலைமறைவானதை அறிந்த காவல்துறையினர் படாளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ராம்தேவ் அடகுக்கடையில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தங்க நகைகளை அடகு வைத்துள்ளனர் அதன் மதிப்பு 1.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும்,  சீட்டு பண்டு 1 கோடி, என மொத்தம் ₹2.5 கோடியுடன் அவர், குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP