இரு சமூகத்தினரிடையே தொடரும் முன்பகை: இளைஞர் படுகொலை!

நெல்லை மாநகர் கரையிருப்பு பகுதியில் இரு சமூகத்தினரிடையேயான முன்பகையில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
 | 

இரு சமூகத்தினரிடையே தொடரும் முன்பகை: இளைஞர் படுகொலை!

நெல்லை மாநகர் கரையிருப்பு பகுதியில் இரு சமூகத்தினரிடையேயான முன்பகையில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

நெல்லை மாநகர் கரையிருப்பு  பகுதியை சேர்ந்த  இரு சமூகத்தினர் இடையே தொடர்ந்து முன்விரோதம் இருந்து  வருகிறது. இந்நிலையில் நேற்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அசோக் (23) என்பவர் தாயாருடன் புல் கட்டை சைக்கிளில் வைத்து எடுத்து வந்துள்ளார். 

அப்போது, அப்பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் பேரன் நடுவழியில் நின்று கொண்டிருந்த போது, அவரது வாகனம் மீது புல்கட்டு உரசியுள்ளது. இதனால் ஆத்திரத்தில் அசோக்கின் தாயாரை ராமசந்திரனின் பேரன் தாக்கியுள்ளார். பதிலுக்கும் அசோக் அவரை தாக்கி விட்டு வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்றிரவு அசோக் வெளியே சென்றுவிட்டு கரையிருப்பு பகுதிக்கு வரும்பொழுது ரயில்வே கேட்டை அடுத்துள்ள மறைவு பகுதியிலிருந்து சிலர் அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி அசோக்கை படுகொலை செய்தனர். 

இரு சமூகத்தினரிடையே தொடரும் முன்பகை: இளைஞர் படுகொலை!

இதையறிந்த அசோக்கின் சமூகத்தை சேர்ந்தவர்கள், முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தாழையூத்து மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்கள் சமூகத்தினரிடம் தொடர்ந்து இது போன்று பிரச்னைகளை  ஏற்படுத்தி பழிவாங்கி வருவது தொடர் வாடிக்கையாக உள்ளதாக தெரிவித்தனர். 

தகவலறிந்து வந்த நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையாளர் பெரோஸ் கான் அப்துல்லா, உதவி ஆணையாளர்கள் போடிலிங்கம் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி போராட்டக்காரர்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP