கண்டெய்னர் விவகாரம்: வதந்தியை பரப்பியதாக மக்கள் நீதி மய்ய உறுப்பினர் கைது!

கோவையில் டீத்தூள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியை மக்கள் முற்றுகையிட காரணமாக இருந்ததாக கூறி மக்கள் நீதி மைய உறுப்பினரை காவல்துறையினர் கைது செய்து தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 | 

கோவையில் நேற்று முன்தினம் இரவு டீத்தூள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியில், கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக எழுந்த வதந்தியையடுத்து மக்கள் உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் லாரியை முற்றுகையிட்டனர். பின்னர் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் லாரியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று சோதனையிட்டனர். 

சோதனையில், டீத்தூள் மட்டுமே இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், மக்கள் நீதி மைய பொறுப்பாளர் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக செயல்பட்டவர் என கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், மக்கள் நீதி மய்ய உறுப்பினர் முகமது சாஜீத்தை காவல் துறையினர் நேற்று காலை வீட்டில் இருந்து கைது செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து  மக்கள் நீதி மைய உறுப்பினர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அரசு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த மக்கள் நீதி மையம் கட்சி பிரமுகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவை அரசு மருத்துவமனையில் கூடியதால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP