நோய் தாக்கிய சின்னவெங்காய பயிருக்கு இழப்பீடு - விவசாயிகள் கோரிக்கை

நோய் தாக்கிய சின்ன வெங்காய பயிர் செய்துள்ளவர்கள் குறித்து கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடன் மனு அளித்தனர். விவசாயிகள் நோயால் பாதிக்கப்பட்ட சின்னவெங்காய பயிருடன் ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு நிலவியது.
 | 

நோய் தாக்கிய சின்னவெங்காய பயிருக்கு இழப்பீடு - விவசாயிகள் கோரிக்கை

நோய் தாக்கிய சின்ன வெங்காயம் பயிரிட்டவர்கள் குறித்து கணக்கெடுத்து, அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடன் மனு அளித்தனர். 

திருச்சி மாவட்டம், நரசிங்கபுரத்தில் விவசாயிகள் சின்னவெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பயரிடப்பட்டுள்ள பயிர்களில் திடீர் நோய் தாக்குதல் ஏற்பட்டதால் பயிர்கள் ஓரிரு நாட்களிலேயே அழிந்ததாகவும், வேளாண்மைதுறை மற்றும் தோட்டக்கலைத் துறையினர் கொடுத்த மருந்துகளை தெளித்தும் எவ்வித பயனும் இல்லை எனவும் அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். 

இந்நிலையில், கந்து வட்டிக்கு கடன் வாங்கி பயிர்கள் சாகுபடி செய்திருந்த நிலையில் தற்போது சின்ன வெங்காயம் அனைத்தும் நோய் தாக்கி அழிந்து விட்டதாகவும் எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என நோயால் பாதிக்கப்பட்ட சின்னவெங்காய பயிர்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தனர்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP