கோவை-பழனி பாசஞ்சர் ரயில் சேவை துவக்கம்

நாடு முழுவதும் சிறிய மற்றும் பெரிய நகரங்களை இணைக்கும் பொருட்டு இந்திய ரயில் சேவா திட்டத்தில் ஒன்பது ரயில் சேவைகளை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இன்று துவக்கி வைத்தார். இதில் தமிழகத்தில் தென்னக ரயில்வே துறை சார்பில் சேலம்-கரூர், கோவை-பொள்ளாச்சி, கோவை-பழனி என மூன்று ரயில் சேவைகள் துவக்கி வைக்கப்பட்டன.
 | 

கோவை-பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணி காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவையானது கடந்த 2017 ஆம் ஆண்டு தற்காலிக ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய திட்டத்தின் மூலம் இந்த ரயிலானது நிரந்தர பயணிகள் ரயிலாக இயக்கப்படுகிறது. 

இதில் கோவையில் இருந்து பழனிக்கு இயக்கப்படும் புதிய பயணியர் ரயில் மதியம் 1.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு பழனி சென்றடையும். இதேபோன்று பழனியில் இருந்து இயக்கப்படும் ரயில் 10.45க்கு புறப்பட்டு மதியம் ரெண்டு 2.00 மணியளவில் கோவை வந்தடையும். இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மைவாடி ரோடு, புஸ்பத்தூர், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் புதிய பயணிகள் ரயில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு 8.40 மணிக்கு கோவை வந்தடையும். இதேபோன்று கோவையில் 5.40 மணிக்கு புறப்படும் ரயில், போத்தனூர் கிணத்துக்கடவு ரயில் நிலையங்களில் நின்று இரவு 7 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.

இன்று நடந்த இதன் துவக்க விழாவினை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார். மொத்தம் ஒன்பது ரயில்களில் மூன்று ரயில்கள் சேலம் கோட்டத்திற்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP