கோவை: 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி இளைஞர்கள் உண்ணாவிரதம்!

கோவை மாதம்பட்டியில் 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 | 

கோவை: 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி இளைஞர்கள் உண்ணாவிரதம்!

கோவை மாதம்பட்டியில் 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் அருகே மாதம்பட்டி என்னும் இடத்தில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. அந்த கடையை மூட கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. மதுக்கடை திறப்பதற்கு அரசு அனுமதித்துள்ள நேரத்தையும் தாண்டி கள்ளத்தனமாக 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெரியவர்கள், மற்றும் இளைஞர்கள் முழுநேரமும் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாகவும், இதனால் அவர்கள் குடும்பத்தினர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் பொதுமக்கள்  தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் மூலம் அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அதை பொருட்படுத்தாமல் மது விற்பனை கள்ளத்தனமாக படு ஜோராக நடைபெறுவதாக பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், மாதம்பட்டி இளைஞர்கள் ஒன்றிணைந்து மதுக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உறுதுணையாக பெண்களும், பெரியவர்களும் களம் இறங்கியதால் மாதம் பட்டியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP