கோவை :  நாசவேலையில் ஈடுபட தமிழகத்திற்குள் நுழைந்துள்ள இரண்டு  பயங்கரவாதிகள் கைது?

நாசவேலையில் ஈடுபடுவதற்காக பயங்கரவாதிகள் கோவை மாவட்டத்திற்குள் ஊடுருவியதாக வெளியான எச்சரிக்கையைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

பயங்கரவாத ஊடுருவல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறை உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சீர்குலைக்கும் வகையில், நாசவேலைகளில் ஈடுபட பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலையடுத்து, 2 பேரை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 2 பேரில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் கோவையைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP