கோவை : கொள்ளையர்கள் காரை விட்டு விட்டு நகைகளுடன் தப்பியோட்டம்..

கேரளாவில் இருந்து வந்து கொண்டிருந்த காரை வழிமறித்து, காருடன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் காரை, மதுக்கரை அருகே விட்டு சென்றுள்ளனர். நகைகளுடன் தப்பிச் சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 | 

கோவை : கொள்ளையர்கள் காரை விட்டு விட்டு நகைகளுடன் தப்பியோட்டம்..

கேரளாவில் இருந்து வந்து கொண்டிருந்த காரை வழிமறித்து, நகைகளுடன் காரையும் பறித்துக் கொண்டு சென்ற மர்மநபர்கள் அந்தக் காரை, மதுக்கரை அருகே நிறுத்தி விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

கேரள மாநிலம் திருச்சூரில் அமைந்துள்ள கல்யாண் ஜுவல்லரி நிறுவன தலைமையத்திலிருந்து, அந்த நிறுவனத்தின் கிளையான,  கோவை காந்திபுரம் பகுதியில் உள்ளகல்யாண் ஜூவல்லரிக்கு நேற்று வழக்கம் போல் பணியாளர்கள் ரூ.92 லட்சம் மதிப்புடைய 350 சவரன் தங்க நகை மற்றும் 243.320 கிராம் வெள்ளிப் பொருட்களுடன் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காக்காசாவடி அருகே இரண்டு கார்களில் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல்  அந்தக் காரை வழிமறித்து, அர்ஜீன் (22), வில்ப்ரட்டை (33) ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு காருடன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். 

கோவை : கொள்ளையர்கள் காரை விட்டு விட்டு நகைகளுடன் தப்பியோட்டம்..

இந்த வழக்கு தொடர்பாக, எஸ்.பி. முத்தரசு தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காருடன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் மதுக்கரை தென்றல் நகர் அருகே காரை  மட்டும் அங்கு நிறுத்திவிட்டு நகைகளுடன் தப்பியோடியுள்ளனர். காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

newstm.in
 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP