கோவை: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் புகுந்துள்ள காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகளை பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

கோவை: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம்

கோவை சோமையம் பாளையம் குடியிருப்பு பகுதிக்குள் கூட்டம் கூட்டமாக புகுந்துள்ள 12 காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் செல்கின்றன. இந்நிலையில் சோமையம்பாளையம் பகுதியில் 12 காட்டு யானைகள் கூட்டமாக நேற்றிரவு ஊருக்குள் புகுந்தன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை  பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர்.

இதேபோன்று துடியலூர் அருகே அப்பநாய்க்கன்பாளையம் கிராமத்திற்குள் நுழைந்த 3 காட்டு யானைகளை விரட்டும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பகல் நேரம் என்பதாலும், அதிகமான மக்கள் நடமாட்டம் இருப்பதாலும் எச்சரிக்கையுடன் யானைகளை கண்காணித்து விரட்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP