கோவை: வெகு விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி!

கோவை சங்கமேஷ்வரர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியினை ஏராளமான பக்தர் கண்டு வழிபாடு செய்தனர்.
 | 

கோவை: வெகு விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி!

கோவை சங்கமேஷ்வரர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியினை ஏராளமான பக்தர் கண்டு வழிபாடு செய்தனர். 

கோவை நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் புகழ்பெற்ற அருள்மிகு  சங்கமேஷ்வரர் கோவிலில்  சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. கோவை  அருள்மிகு சங்கமேஷ்வரர் ஆலயத்தின் பிரகாரத்தில் பரிவார தெய்வங்களில் ஒன்றான வள்ளி தெய்வானை உடனுறையாகிய ஆறுமுகப்பெருமாளுக்கு கந்த சஷ்டியை முன்னிட்டு தினந்தோறும் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கந்த சஷ்டியின் இறுதி நாளான நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மாலை, 6:00 மணிக்கு கோவிலில் இருந்து வந்த முருகப்பெருமான், கோயிலின் உட்பிரகாரத்திலும், கோயிலின் வெளிப்பிரகாரத்திலும் வலம் வந்து, ஆடு வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்.  பின், கோவிலின் நான்கு மட வீதிகளின் மூன்று மூலைகளிலும்  முருகன்,  சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம்  நடைபெற்றது.  இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபட்டனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP