கோவை: தூக்கியெறியப்பட்ட குழந்தை தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது

கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே தூக்கியெறியப்பட்ட குழந்தை இன்று தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
 | 

கோவை: தூக்கியெறியப்பட்ட குழந்தை தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது

கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே தூக்கியெறியப்பட்ட குழந்தை இன்று தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனை பின்புறம் கடந்த வியாழக்கிழமை இரவு,  தூக்கி எறியப்பட்ட பிறந்து 7 நாட்களான ஆண் குழந்தையை கல்லூரி மாணவர்கள் இருவர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். 

இந்நிலையில், அந்த குழந்தை தனியார் காப்பகத்தில் (லைப் லைன்) ஒப்படைக்கப்பட்டது. மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிகாரி முன்னிலையில், அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி செளந்தரவேல் குழந்தையை ஒப்படைத்தார். ஆண் குழந்தைக்கு அர்ஜூன் என பெயர்சூட்டி மகிழ்ந்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP