கோவை: ஸ்ட்ரோக் வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கோவையில் நடைபெற்ற ஸ்ட்ரோக் வாக்கத்தான் நிகழ்ச்சியில் ஸ்ட்ரோக் பிடியில் இருந்து மீண்டு புதுவாழ்வு பெற்ற பலர் கலந்து கொண்டனர்.
 | 

கோவை: ஸ்ட்ரோக் வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கோவையில் நடைபெற்ற ஸ்ட்ரோக் வாக்கத்தான் நிகழ்ச்சியில் ஸ்ட்ரோக் பிடியில் இருந்து மீண்டு புதுவாழ்வு பெற்ற பலர் கலந்து கொண்டனர்.

ரத்த நாளங்களில் அடைப்பு உண்டாகி, மூளையின் பாகங்கள் செயல் இழப்பது பக்கவாத நோய் என அழைக்கப்படுகறது. எந்தவித முன் அறிகுறியும் இல்லாமல் வரக்கூடிய ஆபத்தான இந்த நோய் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்த விழப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற வாக்கத்தானை கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் பேசிய மருத்துவமனையின் தலைவர் நல்லா பழனிசாமி, பக்கவாத நோய் குறித்தும், இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளித்திட கே எம் சி ஹெச் மருத்துவமனையில் நடமாடும் ஸ்ட்ரோக் ஆம்புலன்ஸ் வசதி உள்ளது என்றும் தெரிவித்தார். குறித்த காலத்தில் தகுந்த சிகிச்சையை பெற்றுப் பலனடைந்து ஸ்ட்ரோக் பிடியில் இருந்து மீண்டு புதுவாழ்வு பெற்ற பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பது நோயாளிகளுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிப்பதாக உள்ளது. இளைஞர்கள் மத்தியில் இந்நோய் தாக்கம் சமீப காலமாக அதிகரித்திருப்பது கவலையளிக்கும் விஷயம் என்பதால், நாம் இதுகுறித்து தீவிர கவனம் செலுத்துவது அவசியமாகிறது என்று குறிப்பிட்டார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP