கோவை: கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த பசு மாடு மீட்பு!

கோவை புதூர் அருகே கழிவு நீர் தொட்டியில் விழுந்த கர்ப்பிணி பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
 | 

கோவை: கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த பசு மாடு மீட்பு!

கோவை புதூர் அருகே கழிவு நீர் தொட்டியில் விழுந்த கர்ப்பிணி பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். 

கோவை மாவட்டம்  கோவைப் புதூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு சொந்தமான கர்ப்பிணி பசுமாடு ஒன்று அப்பகுதியில் உள்ள பூங்கா பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த கழிவு நீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது. உடனடியாக அப்பகுதி மக்கள் பசுமாட்டை வெளியே கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர். 

கோவை: கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த பசு மாடு மீட்பு!

ஆனால், வயிற்றில் குட்டியுடன் இருக்கும் பசுமாட்டை வெளியே கொண்டு வர முடியாததால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி கர்ப்பிணி பசுவை பத்திரமாக மீட்டனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP